fbpx
Others

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து செய்தி….

அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதையை செலுத்தினார். இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று அண்ணா நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றார். அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.எனது கவலைகள் அனைத்தும் மாநில உரிமைகள் பற்றியதுதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்குப் அளித்த பேட்டியில், “மாநிலத்தில் சுயாட்சி இருக்க வேண்டும்; இந்தி திணிப்பு கூடாது என்பதே எனது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி,”இவ்வாறு தெரிவித்தார்.   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஆரோக்கியமான உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close