fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்!

சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் இன்று காலமானார்.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதியின்அதிமுக சட்டமன்ற உறுப்பினராக கனகராஜ் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டில் நாளிதழ் படித்து கொண்டிருந்தபோது, திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

உடனே அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், கனகராஜை பரிசோதித்த மருத்துவர்கள்  அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close