fbpx
RETamil NewsTrending Nowஇந்தியா

ஒரு லிட்டர் குடிநீர் 10 பைசா : இஸ்ரோவின் அசத்தல் திட்டம்!!!

ஒரு லிட்டர் மினரல் வாட்டர் ரூ20 என்று விற்பனையாகி கொண்டிருக்கும் நிலையில் நல்ல சுகாதாரணமான குடிநீர் லிட்டர் ஒன்றுக்கு வெறும் 10 பைசாவில் தயார் செய்யும் திட்டம் தங்களிடம் இருப்பதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி என்.சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நேற்று ராமநாதபுரத்தில் நடந்த அறிவியல் கண்காட்சி ஒன்றை தொடங்கி வைத்த விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் பேசுகையில் ;

குறைந்த செலவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் இஸ்ரோவிடம் இருப்பதாகவும், இந்த திட்டத்தின் மூலம் தினமும் 5 லட்சம் மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி உற்பத்தி செய்ய முடியும் என்றும், லிட்டர் ஒன்றுக்கு வெறும் பத்து பைசாவிற்கு இந்த குடிநீரை விற்கும் அளவிற்கு இந்த திட்டம் மிகக்குறைந்த செலவை கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு அரசும் தன்னார்வ அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் முதலீடு செய்ய வேண்டும் என்றும் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டால் தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.ஆனால் திட்டத்திற்கான செலவு குறித்து எதுவும் அவர் பேசவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close