13 ஆயிரம் கொரோனா நோயாளிகளை கடந்த மதுரை மாவட்டம்..!
Madurai corona test cases crosses 13000

மதுரை:
தென் தமிழகத்தின் முக்கிய மாவட்டமான மதுரையில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்துவிட்டது.
மதுரையில் 13 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், அதே போல் மதுரையில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மதுரையில், கடந்த 24 மணி நேரத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,004-ஆக அதிகரித்துள்ளது.
















