காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு கொரோனா பாதிப்பு…! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
Congress mla got corona in tamilnadu

கன்னியாகுமரி:
கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் உள்பட 19 எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்
அதிமுக திமுக எம்எல்ஏக்கள் மாறி மாறி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது முதன் முதலாக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 20 ஆக உயர்ந்து உள்ளது.
















