fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

செங்கல்பட்டில் 6000ஐ கடந்த கொரோனா பாதிப்பு…! கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் தவிப்பு!

6000 corona cases in chengalpattu

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் 6000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா உச்சத்தில் இருக்கிறது. அதன் பாதிப்பால் அண்டை மாவட்டங்களில் கட்டுக்கடங்காத வண்ணம் கொரோனா தொற்றுகள் இருக்கின்றன.

குறிப்பாக செங்கல்பட்டு  மாவட்டத்தில் கொரோனா தீவிரமாகி உள்ளது. இந்த மாவட்டத்தில் ஏற்கனவே 5,807 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.  இன்று காலை நிலவரப்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரேநாளில் 291 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,098- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இதுவரை 96 பேர் உயிரிழந்து உள்ளனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,696 ஆகவும், குணமடைந்தோர்3,014 ஆக உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close