fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

கொரோனாவால் வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள்…! அழைத்து வர 29 விமானங்கள்…!

29 More flights to get Tamils from foreign countries

டெல்லி:

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்து வர மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமான சேவைகள் தொடங்கி உள்ளன.

அதன் கீழ், வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இதுவரை 26 ஆயிரம் தமிழர்கள் 50 விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close