ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
மயக்கம் தரும் ராயபுரம் கொரோனா…! 7 ஆயிரத்தை எட்டுகிறது பாதிப்பு!
Rayapuram registers 6607 corona cases

சென்னை:
தலைநகர் சென்னையில் ராயபுரத்தில் கொரோனா தொற்று 7 ஆயிரத்தை எட்ட உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகம் என்பதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று 44 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ராய புரத்தில் 6,607 பேரும், தண்டையார் பேட்டையில் 5,355 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேனாம்பேட்டையில் 5,213 பேரும், கோடம்பாக்கத்தில் 4,794 பேரும், அண்ணா நகரில் 4,766 பேரும் கொரோனா தாக்கத்துக்கு ஆளாகி உள்ளனர். பல மண்டலங்களில் பாதிப்பு ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது.
மணலி, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகள் ஆயிரத்தை நெருங்கி வருகின்றன. கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கிறது.
















