fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

கொரோனாவால் 60 சதவீதம் பாதிப்பை கொண்டுள்ள 3 மாநிலங்கள்..! தமிழ்நாடு இருக்கிறதா..?

3 states register 60% of India’s corona virus cases

டெல்லி:

நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 60% மூன்று மாநிலங்களில் பதிவாகி இருக்கிறது.

பல மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகம்.

தென்னிந்தியாவில் தமிழகத்தில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தொடர் பாதிப்புகள் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு வரும் 19 ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

இந் நிலையில் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் 60% மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் பதிவாகி உள்ளது. இதையடுத்து துரித நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அறிவுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close