சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் இலவச உணவு..! டிடிவி கோரிக்கை!
TTV dinakaran statement about amma food

சென்னை:
அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைநகரான சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
அதன் காரணமாக வரும் 19 முதல் 30 வரை இந்த பகுதிகளில் முழு முடக்கத்தை அமல்படுத்துவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி இருப்பதாவது: மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அம்மா உணவகங்களில் கட்டணம் ஏதுமின்றி உணவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் ஜூன் 30 ஆம் தேதி வரையிலும் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதைத் தொடர்ந்தால்தான் வேலையிழப்பால் பாதிக்கப்பட்டிருக்கிற தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
















