ஏமாற்றிய சுற்றுலா பயணிகள்…! உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…!
Ooty – Coimbatore bus service suddenly stopped

உதகை:
உதகை – கோவை இடையிலான பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் 2 மாதங்களாக தமிழகத்தில் பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், பல தளர்வுகள் அளிக்கப்பட்டன.

தமிழகத்தில் இப்போது 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கோவை மண்டலத்தில் கோவையில் இருந்து உதகைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் அதில் பயணிகள் என்ற பெயரில் பல்வேறு காரணங்களை கூறி சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்ததாக தெரிகிறது.
இது குறித்து தகவலறிந்த போக்குவரத்து கழக அதிகாரிகள், கோவை, உதகை இடையிலான பேருந்து போக்குவரத்தை ரத்து செய்துள்ளனர். தொழிலாளர்களை மட்டும் ஏற்றி வர தினமும் காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு 7 பேருந்துகளும், மாலை மேட்டுப்பாளையத்திற்கு 3 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.















