fbpx
GeneralRETamil Newsஇந்தியா

திருப்பதி கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்…! ஆந்திரா அறிவிப்பு!

Bus ready for tirupathi dharshan

ஐதராபாத்:

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக பக்தர்களை திருப்பதி மலைக்கு அழைத்துச் செல்ல ஆந்திர போக்குவரத்து கழகம் பேருந்துகளை  ஏற்பாடு செய்திருக்கிறது.

கொரோனா பொது முடக்கத்தால் ஒன்றரை மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பேருந்துகள் இல்லை. கோயிலில் இம் மாதம் 8ம் தேதி துவங்கி பக்தர்களுக்கு மீண்டும் தரிசனம் அளிக்க உள்ளார்.

இந்நிலையில் இரண்டரை மாத காலமாக திருப்பதி திருமலை இடையே ஆந்திர மாநில அரசு பேருந்துகள் மீண்டும் புதுப்பொலிவுடன் 8ம் தேதி முதல் துவங்க உள்ளன. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பயணிக்கும் வகையில் பேருந்துகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரு இருக்கைக்கும், மற்றொரு இருக்கைக்கும் இடையே உள்ள இருக்கையில் பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய அனுமதி கிடையாது. திருப்பதியில் உள்ள ஆந்திர மாநில போக்குவரத்துக் கழக பணிமனைகளில் பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.

Tags

Related Articles

Back to top button
Close
Close