
டெல்லி:
இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தற்போது 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,26,770 ஆக உயர்ந்துள்ளது.

பலியானவர்கள் எண்ணிக்கை 6,348 ஆக இருக்கிறது. கொரோனா இருந்து பின்னர் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,09,462 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக மகாராஷ்டிராவில் 77,793 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2,710 பேர் பலியான நிலையில் 33,681 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 27,256 பாதிப்புகளுடன் 2ம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 18,584 பேரும், டெல்லியில் 25,004 பேரும், ராஜஸ்தானில் 9,862 பேரும், மத்திய பிரதேசத்தில் 8,762 பேரும், உத்தர பிரதேசத்தில் 9,237 பேரும் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.















