ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
திமுக, ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக திடீர் போராட்டம்…! இதுதான் காரணமா?
ADMK protest announcement against dmk
சென்னை:
திமுகவையும், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினையும் கண்டித்து வரும் 1ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
தாழ்த்தப்பட்டவர்களை இழிவாகப் பேசிவரும் திமுகவினரை கண்டித்தும், ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வலியுறுத்தியும் அதிமுகவினர் ஜூன் 1ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அதிமுக தலைமையகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. வரும் 1ம் தேதி காலை 10.30 மணி முதல் 11 மணி வரை மாவட்டந்தோறும் இந்த கண்டனப் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாலுகா அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் போன்ற இடங்களில் போராட்டத்தை நடத்த தேர்வு செய்து கொள்ளுங்கள் என்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.