fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சென்னையில் கொரோனா சவால் தரும் 33 வார்டுகள்…! சிறப்பு அதிகாரி தகவல்!

Chennai corona spread decreases says radhakrishnan IAS

சென்னை: கொரோனாவால் இறப்போர் விகிதம் 0.7 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறி இருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுகிறது.

சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,753ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா நிலவரம் தொடர்பாக கொரோனா தடுப்பு அதிகாரி ராதாகிருஷ்னன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கொரோனாவால் இறப்போர் விகிதம் 0.7 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க முயற்சிக்கிறோம்.. கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

சென்னையின் 3 மண்டலங்களில் நோய்த் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் 33 வார்டுகளில் கொரோனா பாதிப்பு சவாலாக உள்ளது. ராயபுரம், கோயம்படு உள்ளிட்ட இடங்கள் சவாலாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த 100% முகக்கவசம் அணிவது மட்டுமே ஒரே வழி என்று கூறினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close