fbpx
GeneralTamil NewsTrending Nowதமிழ்நாடு

50 நாட்கள் கழித்து கீழடியில் அகழாய்வு..! முக்கிய அறிவிப்புகள் வரும் வாய்ப்பு

After 50 days Keezhadi archaeological work starts

சிவகங்கை:

கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2015ம் ஆண்டு முதல் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. அப்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டன. இதையடுத்து தொடர்ந்து 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெறும் என தமிழக அரசு அறிவிக்க, பிப்ரவரி 10ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது. 6வது கட்ட அகழாய்வு பணி வருகிற செப்டம்பர்  வரை நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந் நிலையில் 50 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டு இருந்த அகழாய்வு பணிகள் தொடங்கி இருக்கின்றன. தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி மற்றும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து ஈடுபட்டனர். விரைவில் இது குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close