GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
ரம்ஜான் தொழுகைகளை மசூதிகளில் நடத்தலாமா..? அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு
Ramzan worship announcement by haji

சென்னை:
ஊரடங்கு காரணமாக ரம்ஜான் தொழுகைகளை வீடுகளில் மேற்கொள்ள தலைமை காஜி அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு மே மாதம் 31ம் தேதி இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மே 25 அன்று இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகை அன்று அனைத்து இஸ்லாமியர்களும் மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்துவர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் ரம்ஜான் அன்று மசூதிகள் திறக்கப்படாது என்றும், ஊரடங்கு அமலில் உள்ளதால் இஸ்லாமிய மக்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு தலைமை காஜி சலாஹுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.















