சென்னை ராயபுரம் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்கியது;மக்கள் அச்சம்!
Rayapuram highest corona cases in chennai

சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் 890 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக அதிகரித்துள்ளது. அதில் 2,176 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 64 பேர் உயிரிழந்தனர்.
அதிலும் குறிப்பாகச் சென்னையில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகம். அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.
அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 890 பேருக்கு கொரோனா உள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 835, திரு.வி.க.நகரில் 662, திருவொற்றியூர் 120, மாதவரம் 72, தண்டையார்பேட்டை 402, அம்பத்தூர் 254, தேனாம்பேட்டை 564, வளசரவாக்கம் 450, அண்ணாநகர் 448 பேருக்கு கொரோனா உள்ளது.
அடையாறு 290, பெருங்குடி 64, சோழிங்கநல்லூரில் 64, ஆலந்தூர் 61, மணலி 66 மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 20 பேர் என மொத்தம் 5,262 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.















