கொரோனாவின் கோர முகம்..! சென்னையில் பிரபல ரயில் நிலையம் மூடல்…!
Corona impact, Mandaivelli railway station closed

சென்னை: சென்னை மந்தைவெளி ரயில் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்களுக்கு கொரோனா உறுதியானதால் அந்த பகுதி பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்து பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறது. ஊரடங்கு இந்த வார இறுதியில் முடிகிறது. இந் நிலையில் மந்தைவெளி ரயில் நிலையத்தில் பணிபுரிந்த 5 காவலர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
உடனடியாக மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் அவர்கள் 5 பேரும் உள்ளனர். இதையடுத்து மந்தைவெளி பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மந்தைவெளி தடத்தில் ரயில்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதார விதிகளின்படி அங்கு 28 நாட்களுக்கு தடை நீடிக்கும். எனவே கடற்கரை முதல் வேளச்சேசி வரை மந்தைவெளி மார்க்கமாக செயல்படும் அனைத்து ரயில்சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.















