ஊரடங்கின் போது வசூலான அபராதம்…! பட்டியலை ரிலீஸ் செய்த போலீஸ்
lockdown penalty Rs 4.60 crore

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் இருந்த வசூலிக்கப்பட்ட தொகை 4.60 கோடி என காவல்துறை அறிவித்துள்ளது.
கொரோனாவுக்காக ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. பாதிப்பின் சதவீதத்தின் அடிப்படையில் மாவட்டங்கள் மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கம் போல எதை பற்றியும் கவலைப்படாமல் வாகன ஓட்டிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இப்போது அதன் காரணமாக வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ. 4.60 கோடியை எட்டி இருக்கிறது.
இது குறித்து காவல்துறை கூறி இருப்பதாவது: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,37,061 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். 4,12,215 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 3,62,036 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.4.60 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















