அது இருந்தால் தான் சரக்கு…! குடிமகன்களுக்கு கண்டிஷன் போட்ட கலெக்டர்..!
Tirupur tasmac, Umbrella compulsory to get liquor

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் குடையுடன் வரும் குடிமகன்களுக்கு மதுபானம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா குறைந்த இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இன்று முதல் அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் ஆட்சியர் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளில் மது வாங்க வருபவர்கள், குடையுடன் வந்தால் தான் மது தரப்படும் என்று அறிவித்துள்ளார். அதை தொடர்ந்து மாவட்டத்திலுள்ள மதுக்கடை ஒன்றில் தடுப்புகள் அமைத்து 6 அடிக்கு ஒருவர் நிற்பது போல் தடுப்புகள் அமைத்து கட்டமும் வரையப்பட்டது.
பின்னர் குடையுடன் வாடிக்கையாளர் வருவது போல ஒத்திகையும் பார்க்கப்பட்டது. சமூக விலகலை மதுபிரியர்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக ஆட்சியர் தரப்பில் பிறப்பித்த உத்தரவு இதுவாகும். இதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.















