RETamil News

மதுரை கோயிலில் பணிபுரிந்த மேலும் இருவருக்கு கொரோனா!!

மதுரையில், கோயில் ஒன்றில்  பணிபுரிந்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.

மதுரையில், கோயில் ஒன்றில் பணிபுரிந்த சிவாச்சாரியாரயரின் தாயார்,

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அதே கோயிலில் பணிபுரிந்த மின்வாரிய பணியாளர் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆகிய இருவருக்கும்  கொரோனா வைரஸ் தொற்று இருப்பது  இன்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள செல்லூர், ஆனையூர், கூடல்நகர், கூடல்புதூர், வண்டியூர் , உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகள்,

கட்டுப்படுத்தபட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில், கடந்த 4 நாட்களில் காவல்துறையினர் இருவருக்கும், சுகாதார பணியாளர்கள் மூவருக்கும், செவிலியர் ஒருவருக்கும்  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close