டெல்லி நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து – 17 பேர் உயிரிழப்பு , தமிழகத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர்?

டெல்லியில் உள்ள கரோல்பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஹோட்டல் இயங்கி வருகிறது. இன்று அதிகாலையில் தீடிரென ஏற்பட்ட தீ விபத்தால் 4 மாடிகளை கொண்ட அந்த ஹோட்டலில் தீ பரவ தொடங்கியது. இதையடுத்து தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அளித்ததும் சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அதிவேகமாக நடந்த இந்த மீட்புப்பணியுலும் குழந்தைகள் உள்பட 17 பேர் பலியாகியுள்ளனர். இந்த தீ விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 4.30 மணிக்கு ஏற்பட்ட இந்த தீ காலை 7 மணி அளவில் தான் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த நிகழ்வு தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.















