மத்திய அரசு ஊழியர்களின் விடுமுறை விதிகளில் மாற்றம்!

7-வது ஊதியக் குழு, மத்திய அரசு ஊழியர்களின் விடுப்பு விதிகளில் புதிய மாற்றத்தை பரிந்துரைத்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் இனி தங்கள் விருப்பத்து ஏற்ப நீண்டநாள் விடுப்பு எடுக்க முடியாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 30 நாட்கள் விடுமுறை எடுக்க உரிமை உண்டு. ஆண்டுக்கு 10 நாட்கள் தற்செயல் விடுப்பு, 19 நட்கள் அறிவிக்கப்பட்ட விடுப்பு போன்றவையும் உண்டு. இதுவே பாதுகாப்புத் துறை சார்ந்த ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 60 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும்.
பல மத்திய அரசு ஊழியர்கள் பணி நாட்களில் இந்த விடுப்புகளை எடுக்காமல் அவற்றைச் சேமித்து வைத்து ஓய்வு பெறும் போது பணமாகப் பெறுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
புதிய விதிகள் அமலுக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் கண்டிப்பாக 20 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள். மேலும் ஒரு ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டுச் செல்லும் போது 10 நாட்கள் விடுப்பை மட்டுமே கொண்டு செல்ல முடியும்.
இப்போது 7-வது ஊதிய குழு விடுமுறை விதிகளில் திருத்தங்களைக் கொண்டு வர பரிந்துறைத்துள்ளதால் என்ன செய்வது என்று மத்திய அரசு ஊழியர்கள் விழித்து வருகின்றனர்.















