fbpx
RETamil News

நடிகர் நாசர் மகனின் நீண்ட நாள் கனவை நனவாக்கிய நடிகர் விஜய்!

தன்னுடைய பிறந்த நாளை விஜய்யுடன் கொண்டாட வேண்டும் என்ற நாசர் மகன் பைசலின் ஆசையை நனவாக்கியுள்ளார் விஜய்.

நடிகர் சங்கத் தலைவரும், முன்னணி நடிகருமான நாசரின் மகன் பைசல். சில வருடங்களுக்கு முன்பு ஈசிஆர் சாலையில் நடைபெற்ற விபத்தில் சிக்கினார். அதிலிருந்து வீட்டிலிருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார்.

பைசல் தீவிரமான விஜய் ரசிகர். இதை அறிந்த விஜய், அவ்வப்போது நாசர் வீட்டுக்குச் சென்று பைசலுடன் நேரம் செலவிட்டு வந்தார். இப்போது பைசல் நல்ல நிலைக்குத் திரும்பியுள்ளார்.

டிசம்பர் 1-ம் தேதி பைசலுக்குப் பிறந்த நாள். தனது பிறந்த நாளை விஜய்யுடன் கொண்டாட வேண்டும் என விரும்பியிருக்கிறார்.

டிசம்பர் 1 ரமேஷ் கண்ணாவின் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார் விஜய். அப்போது நாசரின் வீட்டுக்கு திடீரென்று சென்ற விஜய், பைசலுக்கு ஆச்சர்யம் அளித்திருக்கிறார். பைசலின் பிறந்த நாளை விஜய் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.

இப்புகைப்படங்களை நாசரின் மனைவி கமீலா நாசர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “விஜய் அண்ணாவுடன் பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்ற உன் கனவு நனவாகியுள்ளதே” என்று தெரிவித்துள்ளார். நடிகர் விஜயின் இந்த செயல் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close