RETamil Newsதமிழ்நாடு

ஊரடங்கு தளர்த்தப்படும் தொழிற்சாலைகள் விவரம் வெளியீடு!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ள து.

முதற்கட்டமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை தமிழக அரசு இன்று  வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 20க்கு பிறகு தொழில்துறைகளுக்கு தளர்வு அளிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆனாலும் தமிழக அரசு  ஊரடங்கு முடியும்வரை தளர்வுகள் அளிக்கப்போவதில்லை என முன்பு அறிவித்தது.

இன்று  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக தொழில் அதிபர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை  நடத்தினார்.

அதை தொடர்ந்து ஊரடங்கு சமயத்திலும்  முதற்கட்டமாக சில ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி  அனுமதி அளிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் விவரம்; சுத்திகரிப்பு நிலையங்கள்,

இரும்பு,

சிமெண்ட்,

பெயிண்ட்

கரும்பு,

உர ஆலை,

கண்ணாடி,

டயர் ஆலைகள்,

மிகப்பெரிய காகித ஆலைகள்

உள்ளிட்ட ஆலைகள் செயல்பட அனுமதி   வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close