fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

ஜூனில் 784 தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி…! அதிர்ச்சி தகவல்!

784 corona dead recorded in june tamilnadu

சென்னை:

தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 784 பேர் ஜூன் மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.

சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,000 ஐ கடந்துள்ளது.

தலைநகர் சென்னையில் மட்டும் பாதிப்பு 50,000 ஐ நெருங்குகிறது. அதே போல தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 954 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த பலி எண்ணிக்கையில் 784 பேர் இந்த ஜூனில் மட்டும் பலியாகியுள்ளனர். அவர்களில் 114 பேருக்கு எந்தவித நோய்களும் இல்லை.

அவர்களில் 30 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 84 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அந்த 114 பேரில் பெரும்பாலானோர் 50 வயதுக்கு மேலானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close