ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர் விடுதலை: தமிழக அரசு!!!
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அடுத்து 10 வருடங்களாக தண்டனை அனுபவித்துவரும் ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர்களை விடுதலை செய்ய தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
ஆனால் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது;
பேரவை நடைபெற்றுவரும் நிலையில் ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர் விடுப்பை பேரவையில் அறிவிக்காதது ஏன்? என்றும் இந்த தகவலை செய்தி வெளியீடாக அறிவித்துள்ளது மரபுதானா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் இதுகுறித்து தமிழக அரசு விளக்கமளிக்கையில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி கவர்னருக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இந்த 67 பேர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
விடுதலை செய்யப்படும் 67 பேர்கள் கொண்ட பட்டியல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.