புது டெல்லி,
மத்திய மந்திரி அருண் ஜெட்லி உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வந்தார்.
3 மாதங்களுக்கு பிறகு பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றார்.
மத்திய நிதி மந்திரியும் மாநிலங்களவை ப.ஜ.க. தலைவருமான அருண் ஜெட்லி சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டிருந்தார்.
பிறகு மே 14-ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அருண் ஜெட்லி பதவி வகுத்த நிதித்துறை, ரயில்வே மந்திரி பியூஷ் கோயளிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
சிகிச்சைக்கு பின்னர் இரண்டு மாத ஓய்விற்கு பின் இன்று நடைபெற்ற மாநிலங்களவை துணை தலைவருக்கான வாக்கெடுப்பில் கலந்து கொண்டார்.
துணைத்தலைவருக்கான வாக்கெடுப்பில் ப.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஸ் நாராயண் சிங்க் வெற்றி பெற்றார்.
அருண் ஜெட்லி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.