fbpx
Others

புதிய பேருந்து சேவையை மாதவரம்எம்எல்ஏ சுதர்சனம்தொடங்கி வைத்தார்.

 மாதவரம் பேருந்து நிலையத்தில், 2 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மணலி வரை (த.எண் 121 எம்) என்ற புதிய வழித்தடம் மற்றும் ஏற்கனவே செங்குன்றத்திலிருந்து கோயம்பேடுக்கு சென்று கொண்டிருந்த (த.எண் 58வி) என்ற வழித்தடத்தில் கூடுதலாக ஒரு பேருந்தும் இயக்க மாநகர போக்குவரத்து துறை திட்டமிட்டது.
அதன்படி, இந்த 2 வழித்தட பேருந்துகள் துவக்க நிகழ்ச்சி, மாதவரம் பேருந்து நிலையத்தில் நேற்று  நடைபெற்றது. மண்டல குழு தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார். மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் கலந்து கொண்டு 2 மாநகர பேருந்துகளையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாநகர போக்குவரத்து கழக இயக்குனர் அன்புஆபிரகாம், கிளை மேலாளர் திருநாவுக்கரசு, கவுன்சிலர் சந்திரன், திமுக பகுதி செயலாளர் துக்காராம் மற்றும் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘தடம் எண் 121 எம் என்ற மாநகர பேருந்து கோயம்பேடு முதல் மூலக்கடை, தபால் பெட்டி, மாதவரம் பேருந்து நிலையம், மஞ்சம்பாக்கம் நகர்ப்புற சமுதாய மருத்துவமனை, மணலி 200 அடிசாலை வழியாக, மணலி காமராஜ் சாலையை கடந்து, மணலி பேருந்து நிலையம் வந்தடையும்.இதேபோல், தடம் எண் 58 வி  என்ற பேருந்து கோயம்பேட்டில் இருந்து வடபெரும்பாக்கம், கிராண்ட் லைன் வழியாக செங்குன்றம் பேருந்து நிலையத்திற்கு வந்தடையும். இந்த 2 மாநகர பேருந்தும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்தாக இயங்கும்,’’ என்றனர்.

Related Articles

Back to top button
Close
Close