24 மணி நேரத்திற்கும் மேலாக தவிக்கும் பயணிகள் – ஏர் இந்தியா விமானத்தில் ஏ.சி.கோளாறுதான் காரணமா ?
திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செய்வதற்கு நேற்று மாலை 4.10 மணிக்கு ஏர் இந்தியா விமானம் கிளம்பியது ஆனால் ஏ.சி.கோளாறாகியுள்ளது இதை கவனிக்காத விமானி விமானத்தை ஓட்ட தயாராக இருந்தார் அப்போது விமான பயணிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சுதாரித்த விமானி ,விமானம் கிளம்பும் கடைசி நேரத்தில் விமான நிலைய அதிகாரிகளிடம் இதை பற்றி எச்சரிக்கை செய்தார்.
உடனே விமானத்தை நிறுத்திய விமானி , என்ஜினீயர்களை வரவழைத்தார் அவர்கள் கோளாறை சரி செய்ய நீண்ட நேரம் ஆகும் என்று கூறியதால் விமான பயணிகளை விமானத்திலிருந்து வெளியேறும்படி கூறினர். இவ்வாறு நீண்டநேரமாக காத்திருந்தும் கோளாறு சரிசெய்ய படாததால் விமானநிலையத்தில் காத்துக்கொண்டிருந்த பயணிகளை தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
அதனால் சிங்கப்பூர் செல்ல இருந்த 115 பயணிகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக திருச்சியில் காத்திருந்தனர். தற்போது அந்த பயணிகள் சிங்கப்பூர் செல்ல வேறு ஏற்பாடு செய்து வருவதாக ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.