முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் டெல்லி ராஜ்கோட் அருகே உள்ள ராஷ்ட்ரிய இஸ்மிருதி இஸ்தல் என்ற இடத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது வளர்ப்பு மகள் நமீதா தீ மூட்டினர்.இறுதி சடங்குகள் செய்யப்பட்ட பின் 21 குண்டுகள் முழுக்க உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பா ஜ க தலைவர் அமித்ஷா , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சோனியா அஞ்சலி செலுத்தினர். வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இறுதி அஞ்சலி செலுத்தினர். வாஜ்பாய் உடலுக்கு மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் , மற்றும் பூட்டான் மன்னர் ஜிம்கே சார்க் ஆகியோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் கர்சாய் வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தம்பிதுரை, ராகுல் காந்தி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் இறுதி சடங்கில் அஞ்சலி செலுத்தினர். மேலும் பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் , மத்திய அமைச்சர்களும் இறுதி சடங்கில் அஞ்சலி செலுத்தினர். அவரின் உடலில் போர்த்தப்பட்ட தேசிய கொடியை குடும்பத்தினரிடம் ஓப்படைக்கப்பட்டது.
மூன்று முறை பிரதமர் பதவி வகித்த பா ஜ மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் , உடல் நிலை குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 93.அவருக்கு, பல்வேறு தலைவரும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தினர். அதனால் அடல் பிகாரி வாஜ்பாயின் மறைவை யொட்டி இன்று தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. மத்திய அரசு இன்று அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது.மத்திய அரசின் சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகின்றது.
முதலில் டெல்லியில் பாஜக தலைமையகத்தில் இருந்து வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வாஜ்பாய் உடல் கொண்டு செல்லப்பட்டது. வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் பாஜக முன்னணி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.