பட்டாசு கடையில் அதிகாரிகள் ஆய்வு
ஊத்துக்கோட்டை அக்- 22
பட்டாசு கடையில் அதிகாரிகள் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு தமிழ்நாடு முழுவதும் வருகிற 31ம் தேதி தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பட்டாசு கடை வியாபாரிகள் பட்டாசு விற்பனைக்கான முறையான உரிமம்பெற்று தங்களது பட்டாசு கடைகளில் பட்டாசு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில்,மாவட்ட துணை ஆட்சியர் சத்திய பிரசாத் மற்றும் தாசில்தார் மதன்,துணை தாசில்தார் ஞானசவுந்தரி, வருவாய் ஆய்வாளர் மீனா மற்றும் ஊத்துக்கோட்டை c1 உதவி ஆய்வாளர் பிரசன்ன வரதன், மருத்துவ அலுவலர் சங்கீதா, சிப்காட் தீயணைப்புத்துறை எஸ்.ஐ. ராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் ஊத்துக்கோட்டையில் உள்ள 4 பட்டாசு கடைகளையும், பெரியபாளையத்தில் உள்ள 2 பட்டாசு கடைகள் என மொத்தம் 6 பட்டாசு கடைகளை ஆய்வு செய்தனர்.அப்போது அதிகாரிகள் கடை உரிமையாளர்களிடம், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வைக்க கூடாது, தீப்பிடித்தால் எந்தெந்த பாதுகாப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினர்.