2018-க்கான ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கியது ; இந்தியா முதல் பதக்கம் வென்றது
2018-ஆம் ஆண்டிற்க்கான 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சனிக்கிழமை மாலை இந்தோனேஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951-ஆம் ஆண்டு தான் முதல் முறையாக புதுடில்லியில் துவக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. பின்னர் இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று வெவ்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றது.
18-வது ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்த ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் இந்தோனேஷியாவுக்கு ஒதுக்கியுள்ளது . இந்த இளையாட்டு போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 10,000 வீரர் , வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
தற்போது 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டி ஞாயிற்று கிழமை நடந்தது. அதன் கலப்பு இரட்டையர் பிரிவில் அபூர்வி சந்தேலா மற்றும் ரவி குமார் ஜோடி 429.9 புள்ளிகளை பெற்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. இந்த பதக்கத்தின் மூலம் இந்தியா பதக்க பட்டியலில் தன் கணக்கை துவங்கியது.