RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தில் விதிகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது: சபாநாயகர் தரப்பு
தகுதி நீக்க விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு தான் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆளுநருக்கு அரசை கலைக்க உள்ளது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக வாதிட்டார்.
அப்படி இருக்கையில் 18 எம்எல்ஏக்கள் எதற்காக ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர் என்று கேள்விகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.