fbpx
Others

சின்னதக்கை கிராமத்தில் நோய் தொற்று ஏற்படும் அபாயம்…?

சின்னதக்கை கிராமத்தில் குளத்தில் மழை நீருடன் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம்உபரி நீர்கால்வாயிலேயே தேங்கி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்   ராணிப்பேட்டை மாவட்டம் விளாபாக்கம் முதல் நிலை பேரூராட்சிக்குட்பட்ட சின்னத்தக்கை கிராமத்தில் கலைஞர் நகர்புற மேம்பாடு 2024- 25 திட்டத்தின் கீழ் சுமார் 35 லட்சம் மதிப்பிட்டில் குளம் புரனமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது இந்த பணிகள் குறித்து அங்குள்ள பொதுமக்கள் கருத்து தெரிவித்த போது குளத்தை சுற்றிலும் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பாதுகாப்பு வேலி அமைத்திருக்க வேண்டும் வெளிப்புற மட்டும் வேலி அமைத்துள்ளதால் சிறுபிள்ளைகள் விளையாடும் போது குளத்தில் தவறி விழும் அபாயநிலை உள்ளதுமேலும்குடியிருப்புபகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவுநீர் கால்வாய்களில் தரையை சரியாக போடாமல் ஆங்காங்கே மேடு பள்ளமாக போடபட்டிருப்பதால் பெரும்பாலும் கழிவுநீர் கால்வாய்களிலேயே தேங்கி நிற்கிறது மேலும் கழிவு நீர் நேரடியாக குளத்தில் கலந்து மாசு ஏற்படுகிறது மழைக்காலங்களில் மழை நீரும் அதே கால்வாயில் சென்று குளத்தில் கலக்கின்றன குளம் நிரம்பி உபரி நீர் வெளியேற வழி இல்லாததால் தண்ணீர் சென்ற அதே கால்வாயிலேயே திரும்பி வந்து நிரம்பி நிற்கின்றன கழிவு நீரும் மழை நீரூம் கலந்து நிற்பதால் குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி இரவு நேரங்களில் தூங்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர் நோய் தொற்று ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது கால்வாய்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் முழுமையாக வெளியேறவும் குளத்திலிருந்து உபரி நீர் வெளியேறுவதற்கு வழி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்   விளாபாக்கம் முதல் நிலை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

 

 

Related Articles

Back to top button
Close
Close