fbpx
RETamil News

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இனி நேரடியாக +2 தேர்வை எழுத முடியாது.

10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இனி நேரடியாக +2 தேர்வை தனி தேர்வராக எழுத முடியாது என்று அரசு தேர்வு இயக்கம் அறிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 10-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 எனப்படும் மேல்நிலை இரண்டம் ஆண்டு தேர்வை தனி தேர்வராக எழுதலாம் என்ற விதிமுறை இருந்தது.

ஆனால் இப்போது 10-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 எனப்படும் மேல்நிலை இரண்டம் ஆண்டு தேர்வை தனி தேர்வராக எழுத முடியாது என்று அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ;

தமிழகத்தில் இதுவரை 10-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 எனப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வை தனி தேர்வராக எழுதலாம் என்ற விதிமுறை இருந்தது.

ஆனால் இப்போது +1 எனப்படும் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வும் அரசு பொது தேர்வாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 10-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 எனப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வை தனி தேர்வராக எழுத முடியாது. +1 எனப்படும் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வும் எழுதி தேர்ச்சி பெற்றால் தான் +2 எனப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வை எழுத முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close