fbpx
Others

E. P. S – விஜய் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார். ஆனால் அரசியலில்…..?

2026 தேர்தலில் திமுகவை வீழ்த்துவதே ஒரே இலக்கு"- டெல்லியில் இருந்து  திரும்பிய எடப்பாடி பழனிசாமி பேட்டி!விஜய் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார். ஆனால் அரசியலில் ஏதேனும் ஒரு தேர்தலில் போட்டியிட்டால் தான் தெரியும் என எதிர்க்கட்சிதலைவரும்,அதிமுகபொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமியிடம், “தமிழகத்தின் தேர்தல் சூழ்நிலை இப்போது எப்படி இருக்கிறது?” என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. அதன்பிறகு தான் நிலைமை என்னவென்று தெரியும். எனினும் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அதிமுகவும் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து ஒரு வலுவானகூட்டணி அமைத்துள்ளோம். தேர்தலுக்கு நாங்கள் தயாராகி விட்டோம். ஏற்கனவே  நான் ஒரு 181 தொகுதிகளில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு மக்களை சந்தித்துள்ளேன்” என தெரிவித்தார்.மேலும்அதிமுகவின் தேர்தல் பயணம் மிகச்சிறப்பாக எழுச்சியாக இருந்தது. மக்களிடத்தில் மிகப்பெரும் வரவேற்பு இருந்தது. வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிப்பெறப்போகிறதுஎன்பதைமக்களின்முகத்தில்பார்க்கமுடிகிறது”எனஇபிஎஸ்தெரிவித்தார்.தொடர்ந்துகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக இருப்பதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி, “ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் மாறுபட்ட தீர்ப்பை தான் வழங்கியிருக்கிறார்கள். 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு அதிகமான இடங்கள் கிடைத்தது. ஆனால் 2021 சட்டமன்ற தேர்தலில் எங்களுடைய கூட்டணி 75 இடங்களுக்கு மேல் வென்றது. எனவே நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் வேறு என்பதைபுரிந்துக்கொள்ளவேண்டும்.சட்டமன்றதேர்தலில்யார்ஆட்சிக்குவரவேண்டும்,வரக்கூடாதுஎனமக்கள்முடிவுசெய்வார்கள்  2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள். கருத்து கணிப்பு எப்படி இருந்தாலும் மக்கள் கணக்கு திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். அதுநிச்சயம் நடக்கும். சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார். ஆட்சியில் பங்கு குறித்து திமுககாங்கிரஸ் கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இது அவர்கள் கூட்டணியில் குழப்பமான சூழல் உள்ளதைக் காட்டுகிறது. தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் போட்டியிடுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அந்த கட்சி ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. அப்படி போட்டியிட்டால் மட்டுமே அவர்களுக்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பது தெரிய வரும். மற்ற கட்சிகள் எல்லாம் உள்ளாட்சிதேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் எடுத்தவுடன் முதலமைச்சர் ஆகவில்லை. பல ஆண்டுகளாக கட்சி பணியாற்றி தான் மக்களின் நன்மதிப்பை பெற்றதன் அடிப்படையில் தான் முதலமைச்சராகும் வாய்ப்பை மக்கள் வழங்கினார்கள். விஜய் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார்.ஆனால்அரசியலில்கிடையாது. அவர் ஒரு தேர்தலை சந்தித்தால் தான் அதைப்பற்றி விளக்கம் சொல்ல முடியும். இளம் தலைமுறையினர் ஒரு ஆட்சியில் என்ன நடந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close