fbpx
RETamil Newsஇந்தியா

மானியத்துடன் கூடிய சமையல் கேஸ் சிலிண்டரின் விலை குறைப்பு-இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு !

மானியத்துடன் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு ரூ. 5.91 குறைக்கப்படுவதாகவும், மானியம் இல்லா சிலிண்டர் விலை ரூ.120.50 குறைக்கப்படுவதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

 

மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு விலைக்கு ஏற்ப அவ்வப்போது உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன.

ஒரே மாதத்தில் 2-வது முறையாக விலைக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை ரூ.6.52- குறைக்கப்பட்டது. சந்தையில் எரிபொருள் விலை குறைந்து வருவதைக் கணக்கில் கொண்டு இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை குறைப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 494.99 ஆக இருக்கும். தற்போது இது ரூ. 500.90 ஆக உள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து ஆறு மாதங்களாக விலை உயர்ந்து வந்தது. டிசம்பரில் தான் விலை குறைக்கப்பட்டது. தற்போது 2-வது முறையாக டிசம்பரில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close