fbpx
RETamil Newsஅரசியல்உலகம்

வட கொரிய அதிபரின் புகைப்படம் வெளியீடு : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

North Korean Chancellor's Photo Release: End of Rumors

 

வட கொரியா  அதிபர் கிம் ஜாங் உன் உடல் பருமன்,புகைப்பிடித்தல் அதிக வேலைப்பளு காரணமாக இதயநோயால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும், இதனால் இவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் எனவும் செய்திகள் வெளியாயின.

பின்னர் அவரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் இவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ளவில்லை என வதந்தி பரவியது. கிம் ஜாங் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என பரவி வந்த செய்தியை தென் கொரியா மறுத்தது. இது போன்று எந்த விஷயமும் வட கொரியாவில் தென்படவில்லை என்று தென் கொரியா கூறியது. இந்த வதந்தியை முறியடிக்கும் வகையில் வட கொரியா தரப்பில் கிம் ஜாங் உன் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் வட கொரியாவில் உள்ள உரத் தொழிற்சாலை ஒன்றை கிம் திறந்து வைப்பது போன்ற புகைப்படத்தை வட கொரியா அரசு வெளியிட்டு உள்ளது. இதில் கிம் தனது சகோதரியுடன் திறப்பு விழாவில் நேற்று கலந்துக்கொண்ட படங்கள் வெளியாகி உள்ளன. சுமார் மூன்று வார காலமாக பரப்பப்பட்டு வந்த வதந்தியை முறியடிக்கும் வகையில் இன்று புகைப்படங்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close