செல்வப்பெருந்தகை — தொழிலாளர் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தன…
2020ம் ஆண்டு நாடாளுமன்றத்தில்நிறைவேறிய4தொழிலாளர் சட்டங்கள் நேற்று (நவ.21) முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது.அதன்படி, 4 தொழிலாளர்சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தன. இதில், ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஊதியக் குறியீடு, தொழில்துறைபாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச் சூழல்குறியீடுஎன4சட்டங்களாகஒருங்கிணைத்து,புதியவிதிகள்சேர்க்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் புதிய தொழிலாளர்அமலுக்கு வந்தது. இவை முற்போக்கான சீர்திருத்தங்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார். இதுகுறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது,நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தது. புதிய சட்டம் தொழிலாளர்கள் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு. புதிய தொழிலாளர்கள் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு. புதிய தொழிலாளர் சட்டம் விக்சித் பாரதம்2047 என்ற இலக்கை அடைய புதிய உத்வேகத்தை வழங்கும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சரியான நேரத்தில் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதத்தை புதிய தொழிலாளர் சட்டம்அளிக்கும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம், பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் மரியாதையை புதியதொழிலாளர்சட்டம்அளிக்கும்.40வயதுக்குமேற்பட்டதொழிலாளர்களுக்கு இலவச வருடாந்திர சுகாதார பரிசோதனை உத்தரவாதம் அளிக்கும்” என்று தெரிவித்தார். அதேநேரம், புதிய சட்டத்தின் மூலம் வணிகங்கள்இப்போது பீடி, சுருட்டு சுற்றுவது உள்ளிட்ட தொழிலாளர்களை 12 மணி நேர ஷிப்டுகளுக்கு வேலைக்கு அமர்த்தலாம். இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நாடு முழுவதும் கட்டாயமாக அமலாக்கப்பட்டுள்ள புதிய தொழிலாளர்சட்டங்கள், தொழிலாளர்களின் நலனையும் மனிதநேய உரிமைகளையும் நேரடியாக புறக்கணிக்கும் முடிவாகும். உழைக்கும் மக்களை பலவீனப்படுத்தும் நோக்கத்திலேயே ஒன்றியஅரசு எடுத்திருக்கும் இந்தச் சட்டங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 8 மணி நேர வேலை நேரம் என்பது ஒரு சாதாரணவிதிமுறை அல்ல; தலைமுறைகள் கடந்து நடந்த ரத்தத்தும் உயிர்தியாகங்களும் கொண்ட போராட்டங்களின் பயனாக உருவான வரலாற்றுச் சாதனை. தொழிலாளர்களின் உடல்நலம், குடும்ப நேரம், சமூக வாழ்வு இவை அனைத்தையும் காக்கும் மனிதநேய உரிமையாக இதை உறுதி செய்தவர் புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர். ‘தொழிலாளர் ஒருமனிதன்;இயந்திரம்அல்ல’என்றஅவரின்உயர்ந்தகொள்கையின் அடிப்படையில்நாடுமுழுவதும்8மணிநேரவேலைநேரம்என்பதுசட்டமாககொண்டுவரப்பட்டது.அந்த உரிமையை 12 மணிநேரமாக நீட்டிக்க முயல்வது தொழிலாளரின் ரத்தத்தை உறிஞ்சும் கொடூரமான முடிவு. மேலும், தொழிலாளர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட 29 முக்கியமான சட்டங்களை ஒரே அடியில் களைந்து 4 சட்டங்களாகச் சுருக்கும் நடவடிக்கை, தொழிலாளர் வர்க்கத்தின் குரலையும் பாதுகாப்பையும் பறிக்கும் செயலாகும்.இந்த மாற்றங்கள் தொழிலாளர்களுக்காக அல்ல; நாட்டின் பெருஞ்செல்வத்தை தன் வசம் வைத்துள்ள பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களான அம்பானிக்கும், அதானிக்கும்திட்டமிட்டு கொண்டு வரப்படுகின்றன. உழைப்பால் தேசத்தை வளர்க்கும்மக்களின்சுவாசத்தையும்,துன்பத்தையும் இந்த ஒன்றிய அரசு தொழிலாளர் நலனில் மிகவும் அலட்சியமாக உள்ளது. இந்த நாள் இந்திய தொழிலாளர் வரலாற்றில் ஒரு கருப்புதினமாகும், தொழிலாளர்களின் நலனையும், உயிர் பாதுகாப்பையும் பறிக்கும் இந்தஒன்றிய அரசு தொழிலாளர் நலனில் மிகவும் அலட்சியமாக உள்ளது. இந்த நாள்இந்தியதொழிலாளர்வரலாற்றில்ஒருகருப்புதினமாகும்,தொழிலாளர்களின் நலனையும்,உயிர் பாதுகாப்பையும் பறிக்கும் இந்த சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். உழைக்கும் மக்களின் வியர்வையை நாட்டின்செல்வமாக மதிக்கும் அரசியல் பண்பாட்டை உருவாக்குவதே எங்கள் உறுதியான நிலைபாடு. இந்த அநீதி நீங்கும் வரை, எங்கள் குரலும், எங்கள் போராட்டமும் தொடர்ந்தும் ஒலிக்கும். தொழிலாளர்களின் உரிமைகாக்கப்படும்வரைநாம்ஒருபோதும்இந்தபோராட்டத்தில்இருந்துபின்வாங்கமாட்டோம்.” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.