Others
கோவை–மாணவர்களை பள்ளியில் சேர்க்கை விழிப்புணர்வு நோட்டீஸ்..


கோவை மாநகராட்சி, வடவள்ளி (வடக்கு) நடுநிலைப்பள்ளியில் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1 முதல் துவங்கப்பட்டது. அப்பள்ளியில் புதியதாக சேர்க்கப்பட்ட மாணவ செல்வங்களை தலைமையாசிரியர் (பொறுப்பு) மற்றும் சக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கிரிடம் வைத்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று மாணவர்களை பள்ளியில் சேர்க்கை நடைபெற்று வருவதாக கூறி விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.
கோவை மாவட்ட நிருபர்
க. அஜித் குமார்