Others
ராணிப்பேட்டை–மணல் கடத்திச் சென்ற வாகனம்பறிமுதல்…
கள்ளத்தனமாக மணல் கடத்திச் சென்ற வாகனத்தை வருவாய்த் துறையினர் பறிமுதல்
ஆற்காடு கிராமிய போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த எசையனூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகன் சூர்யா இவர் இன்று அதிகாலை எசையனூர் பாலாற்றில் அவருக்கு சொந்தமான பொலிரோ வாகனத்தில் கள்ளத்தனமாக மணல் அள்ளிச் சென்றபோது வட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில் வருவாய் ஆய்வாளர் ராமு, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் மற்றும் கிராம உதவியாளர் குழுவாக சென்று வாகனத்தை மடக்கி பிடித்து ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இச்சம்பவம் குறித்து ஆற்காடு கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணம் மேற்கொண்டு வருகின்றனர்