கேரளாவில் பெய்துவரும் தொடர் மழையால் கேரளா மாநிலம் முழுவதும் வெள்ள நீராக காணப்படுகிறது.மீட்பு குழு பணிகள் முழு தீவரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதுவரை 29 பேர் மழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தனர்.இவற்றில் 24 பேர் நிலச்சரிவில் சிக்கியும் 5 பேர் வெள்ளத்தில் மூழ்கியும் இறந்துள்ளனர்.5400 பேர் வெள்ளத்தால் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
32 ராணுவ விமானங்கள் 5 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை கேரளா முதல்வர் பினரயி விஜயன் ஹெலிகாப்டர் மூலமாக ஆழ்வு செய்தார்.
கேரளாவில் வெள்ள அபாய எச்சரிக்கை 15 தேதி வரை நீடிக்கும் என அரசு தெரிவித்துள்ளது.கேரளா மக்கள்
அனைவரும் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு கேரளா அரசு அறிவித்துள்ளது.