fbpx
REஅரசியல்இந்தியா

வெடிகுண்டு வழக்கில் ஜாமினில் வந்த குற்றவாளிக்கு வழக்கம் போல் பாஜக பிரம்மாண்ட வரவேற்பு!!!

குஜராத்

அஜ்மீர் தர்கா வெடிகுண்டு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவரான பாவேஷ் படேல் ஜாமினில் வெளி வந்ததை அடுத்து  பாரூச் நகரில் பாஜக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு நடைபெற்றுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஆஜ்மீர் தர்காவில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த வெடி விபத்தில் மூவர் மரணம் அடைந்தனர்.

சுமார் 15க்கும் மேற்பட்டவர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் கடந்த 2017ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் குற்றம் நிரூபிக்கப்பட்ட  பாவேஷ் படேல் மற்றும் தேவேந்திரகுப்தா ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

தண்டனை பெற்ற இருவரும் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இதில் பாவேஷ் படேல் குஜராத் மாநிலம் பாரூச் நகரை சேர்ந்தவர்.

இவனுக்கு  பாரூச் நகரில் பிரம்மாண்டமான வரவேற்பை பாஜகவும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பும் அளித்துள்ளன.

கடந்த ஞாயிறு அன்று சிறையில் இருந்து பாரூச் நகருக்கு வந்த இவனை  வரவேற்க பாரூச் ரெயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி இருந்தனர்.

படேல் வந்து ரெயிலில் இருந்து இறங்கியதும் மக்கள் அவனை  ரெயில் நிலையத்தில் இருந்து தோளில் தூக்கிச் சென்றனர்.

வாண வேடிக்கைகள், மாலை மரியாதைகள் என தடபுடலாக நடந்த வரவேற்பில் நடன நிகழ்ச்சியும் இடம் பெற்றிருந்தது.

கூட்டத்தினர் அனைவரும் காவி உடைகளில் காவிக் கொடிகளை கையில் ஏந்தியபடி படேலை வரவேற்றனர்.

ஆயுள் தண்டனைக் கைதிக்கு நடந்த இந்த வரவேற்பில் பாரூச் பாஜக நகர மன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close