fbpx
REதமிழ்நாடு

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி!மத்திய சுகாதாரத்துறை!!

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை சோதனைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அனுமதி அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் இன்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதி வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதில் இந்தியாவில் 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 1,273 கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிகிறது.

கொரோனாவிலிருந்து  குணமடைந்தோர் எண்ணிக்கை சதவிகிதத்தில் 29.36% எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு  உட்பட நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளில் கொரோனா பிளாஸ்மாக சிகிச்சை முயற்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாம் கொரோனா வைரசோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் கூறியுள்ளார்.

இதற்க்கு முன்பு பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி இல்லை என்று இரண்டு தினங்களுக்கு முன்பு சுகாதாரத்துறை கூறியது.

Related Articles

Back to top button
Close
Close