விலையை சொல்லு! பரிசை அள்ளு!! காங்கிரஸ் கொடுக்கும் அறிய வாய்ப்பு!!!
பாட்னா : பீஹாரில், ‘ஒரு ரபேல் விமானத்தின் விலை எவ்வளவு என சொல்லும் நபருக்கு, 5 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும்’ காங்கிரசார், போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
பீஹார் தலைநகர் பாட்னாவின் முக்கிய பகுதிகளில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோரின் கார்ட்டூன்கள் இடம் பெற்றுள்ள போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:
ரபேல் ரக விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், ஒரு ரபேல் விமானத்தின் விலை எவ்வளவு என, யாராவது சொல்ல முடியுமா?
நாட்டின் பல பகுதிகளில், 35 விமான நிலையங்களை திறந்து வைத்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார்.
அவை, எங்கெங்கு அமைக்கப்பட்டுள்ளன; அவற்றின் பெயர் என்ன என்பதை யாரேனும் கூற முடியுமா?
இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நபருக்கு, துர்கா பூஜையை முன்னிட்டு, பண்டிகை கால பரிசு தொகையாக, 5 கோடி ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.