RETamil Newsஅரசியல்இந்தியா
ரஃபேல் ஊழல் குறித்து நேருக்கு நேர் விவாதத்துக்கு மோடிக்கு ராகுல் அழைப்பு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கான பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பாஜக சார்பாக பிரதமர் மோடியும் காங்கிரஸ் சார்பாக அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அம்பிகாபுரியில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் கலந்துக் கொண்டார். தனது சுற்றுப் பயணத்தின் இடையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். ரஃபேல் ஒப்பந்தம் குறித்து அப்போது கேள்வி எழுப்பப் பட்டது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ரஃபேல் ஒப்பந்தம் குறித்து என்னுடன் நேருக்கு நேர் 15 நிமிட விவாதத்துக்கு மோடி தயாரா? என்னை பேச அனுமதித்து அதற்கு மோடி பதில் அளிப்பாரா? நான் ரஃபேல் தொடர்பாக எழுப்பும் எந்த கேள்விக்கும் அவரால் பதில் அளிக்க முடியாது” என உறுதியாக கூறினார்.