பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கு பகிர்ந்தளிப்பு !
ஸ்டாக்ஹோம் : 2018 – ஆம் ஆண்டிற்கான, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் 2018 -ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் ஆகிய 2 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்விற்காக இவர்களுக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது நீண்ட கால அடிப்படையிலான பொருளாதாரத்துக்கு உதவும் வகையில் தொழில்நுட்பங்களை உருவாக்கியதற்காகவும், பருவ நிலை மாற்றம் சார்ந்த பொருளாதார ஆய்வுக்காகவும் இவர்களுக்கு வழங்கப்படுகிறது.
வில்லியம் டி நார்தாஸ், பால் எம்.ரோமர் ஆகிய இருவரும் பரிசு தொகையான 6.5 கோடி ரூபாயை பாதியாக பகிர்ந்து கொள்ள உள்ளனர். நோபல் பரிசுகள் ஆல்பரட் நோபல் நினைவு தினமான வரும் டிசம்பர் 10-ம் தேதி வழங்கப்பட உள்ளது. பொருளாதார துறையில் இதுதான் மிக உயரிய விருது.