பொருளாதாரக் குற்றங்கள் செய்துவிட்டு வெளிநாடு தப்பியவர்களின் பட்டியல் வெளியீடு
பொருளாதாரக் குற்றங்கள் செய்துவிட்டு வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
28 பேர் கொண்டுள்ள பட்டியலை வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் மக்களவையில் தாக்கல் செய்திருக்கிறார்.
அதன்படி விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி உள்ளிட்ட தொழிலதிபர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.
இவர்களில் 23 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், 13 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட 8 பேர் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது செய்திருக்கின்றன.
கடந்த மார்ச் மாதம் இதே போன்று தாக்கல் செய்யப்பட்ட பட்டியலில் 23 பேர் வெளிநாடுகளில் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
பொருளாதாரக் குற்றங்கள் செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடியவர்களை விசாரணைக்காக இந்தியா அழைத்து வர பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 48 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.